--- --:--:-- --

இயக்குனர் லிங்குசாமிக்கு ஆறு மாத சிறை தண்டனை..!

4

காசோலை மோசடி வழக்கில் திரைப்பட இயக்குனர் லிங்குசாமி மற்றும் அவரது சகோதரருக்கு பிறப்பிக்கப்பட்ட ஆறு மாத சிறை தண்டனையை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உறுதி செய்தது.

 

2014 ஆம் ஆண்டு ஒரு நிறுவனத்திடம் இருந்து பெற்ற கடனுக்காக கொடுத்த 35 லட்சம் ரூபாய்க்கான காசோலை வங்கியில் பணம் இல்லாமல் திரும்பியது. இதனால் நிறுவனம் தொடர்ந்து வழக்கில் லிங்கு சாமிக்கு ஆறு மாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

 

இதனையடுத்து லிங்குசாமி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி மனுவை தள்ளுபடி செய்ததுடன் கடனை வட்டியுடன் சேர்த்து திருப்பி செலுத்த வேண்டும் என்ற உத்தரவையும் உறுதி செய்தார்.

 

இயக்குனர் லிங்குசாமியுடன் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனத்தில் அவரது சகோதரர் சுபாஷ் சந்திர போஸ் மீதான தண்டனையும் நீதிபதி உறுதி செய்தார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon