ஆளுநருக்கு எதிராக எங்களை போல் செய்யுங்கள் – பாஜக அல்லாத மாநிலங்களுக்கு முதல்வர் கடிதம்
தமிழ்நாடு ஆளுநருக்கு எதிராக பேரவையல் நிறைவேற்றப்பட்டது போன்ற தனி தீர்மானத்தை ஒவ்வொரு மாநில சட்டமன்றத்திலும் நிறைவேற்றுமாறு பாரதிய ஜனதா அல்லாத மாநில முதலமைச்சர்களை மு.க.ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார்.
இது தொடர்பாக பாரதிய ஜனதா அல்லாத மாநில முதலமைச்சர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் எழுதி இருக்கும் கடிதத்தில் இந்தியாவில் மக்களாட்சி இன்று முக்கியமான கட்டத்தில் உள்ளது என்பதையும் நமது நாட்டில் கூட்டாட்சி தத்துவம் என்பது படிப்படியாக மறைந்து வருவதையும் காண்கிறோம் என குறிப்பிட்டுள்ளார்.
மாநில சட்டமன்றங்களால் நிறைவேற்றப்பட்டு அனுப்பப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்காமல் சில மாநில ஆளுநர்கள் காலவரையின்றி நிலுவையில் இருப்பதால் அந்தந்த மாநில நிர்வாக செயல்பாடுகள் அந்த குறிப்பிட்ட இடங்களில் முடங்கிப் போய் உள்ளதாக தனது கடிதத்தில் ஸ்டாலின் சுட்டிக்காட்டியுள்ளார்.
மசோதாக்களுக்கு ஆளுநர்கள் ஒப்புதல் அளிக்க காலக்கெடுவை நிர்ணயம் செய்யும்படி மத்திய அரசையும் வலியுறுத்தி மாநில சட்டமன்றங்களில் தீர்மானங்களை ஏற்றுவது ஏற்புடையதாக இருக்கும் என கருதி அது சம்பந்தமாக தமிழ்நாடு பேரவையின் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தையும் சாராம்சத்தையும் நினைத்து அனுப்புவதாகவும் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





