--- --:--:-- --

8வது மாடியில் இருந்து தவறி விழுந்து சிறுவன் பலி..!

8

சென்னை அடுத்த ஆவடியில் கட்டுமான பணியில் ஈடுபட்டிருந்த வடமாநிலத்தை சேர்ந்த 15 வயது சிறுவன் எட்டாவது மாடியில் இருந்து தவறி கீழே விழுந்த உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

ஆவடி பருத்திப்பட்டு பகுதியில் மத்திய அரசின் கேந்திரிய அடுக்குமடி குடியிருப்புகள் உள்ளன. இங்கு நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த வளாகத்தில் மூன்றாம் கட்ட விரிவாக்க கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றன.

 

இதற்காக வட மாநில தொழிலாளர்கள் 500க்கும் மேற்பட்டோர் அங்கேயே தங்கி கட்டுமான பணிகளை இரவும் பகலமாக செய்து வருகின்றனர். இதில் மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த 15 வயது சிறுவன் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு புதிதாக வேலைக்கு சேர்ந்துள்ளான்.

 

பாதுகாப்பு அம்சங்கள் எதுவும் அணியாமல் கட்டட வேலை மேற்கொண்ட பொழுது எட்டாவது தளத்திலிருந்து சிறுவன் தவறி விழுந்ததில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தான். தகவலின் பேரில் வந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரயோத பரிசோதனைக்கு அனுப்பி வைத்த நிலையில் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon