வேறு சமூகத்தை சேர்ந்தவரை காதலித்ததால் ஆத்திரம்..!
தெலுங்கானாவில் வேறு சமூகத்தை சேர்ந்த நபரை மகள் காதலித்த ஆத்திரத்தில் மகளின் காதலனை பெண் வீட்டார் ஆணவ கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. தெலுங்கானா மாநிலம் நலகொண்டா மாவட்டத்தை சேர்ந்தவர் நவீன்.
இவர் அதே பகுதியில் ஒருவரை கடந்த ஐந்து ஆண்டுகளாக காதலித்து வந்தார். மகளின் காதல் விவகாரம் பெண் வீட்டாருக்கு தெரிய வரவே நவீனை அழைத்து அவரவர்கள் எச்சரித்துள்ளனர்.
ஆனால் காதலில் இருவரும் உறுதியாக இருக்கவே சமாதான பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ளனர். அப்பொழுது டூவீலரில் திடீரென வந்த பெண்ணின் உறவினர்கள் நவீனை தாங்கள் வைத்திருந்த அறிவாளால் சரமாரியாக வெட்டினர்.
இதில் பலத்த காயமடைந்த நவீன் சம்பவ இடத்திலேயே பலியானார். நவீனின் சடலத்தை கைப்பற்றிய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





