--- --:--:-- --

மக்களவையில் எம்பி பாரிவேந்தர் கேள்விக்கு அமைச்சர் நிர்மலா சீதாராமன் பதில்..!

3

வெளிநாடுகளை சேர்ந்த 3 ஆயிரத்து 295 நிறுவனங்கள் இந்தியாவில் தொழில் நடத்தி வருவதாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

 

பெரம்பலூர் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் பாரிவேந்தர் எழுப்பிய கேள்விக்கு அளித்த பதிலில் கம்பெனிகள் சட்டத்தின் 380 வது விதிப்படி வெளிநாட்டு நிறுவனங்கள் பதிவு செய்து கொண்டு இந்தியாவில் தொழில் நடத்தி வருவதாக அமைச்சர் கூறியுள்ளார்.

 

இது தவிர 14 ஆயிரத்து 173 வெளிநாட்டு நிறுவனங்கள், துணை நிறுவனங்களின் கீழ் இந்தியாவில் தொழில் நடத்தி வருவதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

 

இந்தியாவில் வெளிநாட்டு நிறுவனங்கள் தொழில் தொடங்குவதும் அவற்றில் ஒரு சில நிறுவனங்கள் தங்கள் தொழிலை கைவிட்டு வெளியேறுவதும் தொடர்ச்சியாக நடைபெறும் நடவடிக்கைகள் எனவும் நிதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon