அடுத்த மூன்று நாட்களுக்கு மழை நீடிக்கும்..!
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 22ஆம் தேதி வரை மழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தென்னிந்திய பகுதிகளில் மேல் நிலவும் வளிமண்டலத்தின் கீழ் அடுக்குகளில் ஏற்பட்டுள்ள காற்றின் திசை மாற்றம் காரணமாக 22 ஆம் தேதி வரை தமிழ்நாடு புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் ஒரு சில இடங்களில் இடி. மின்னலுடன் கூடிய மிதமானது வரை மழை பெய்யும் எனவும் கூறப்பட்டுள்ளது.
தஞ்சாவூரில் அதிகபட்சமாக 7 செண்டிமீட்டர் மழையும், சேலம், மேட்டூர், மேற்கு தாம்பரம் பகுதிகளில் தலா 6 சென்டிமீட்டர் மழையும் பதிவாகியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.





