--- --:--:-- --

பாலியல் தொல்லை தந்த பயிற்சியாளர்..மாடியில் இருந்து குதித்து தப்பிய மாணவி..!

5

காஞ்சிபுரத்தில் கல்லூரி மாணவியை வீட்டிற்கு அழைத்து பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சித்த விளையாட்டு பயிற்சியாளரை போலீசார் கைது செய்தனர்.

 

ரயில்வே சாலையில் அமைந்துள்ள அண்ணா விளையாட்டு அரங்கில் முருகேசன் என்பவரிடம் கல்லூரி மாணவி ஒருவர் பயிற்சி எடுத்து வந்தார். மாணவி பயிற்சி சான்றிதழை கேட்ட பொழுது அருகில் உள்ள தனது வீட்டிற்கு வந்து பெற்றுக் கொள்ளுமாறு கூறிய முருகேசன் வீட்டில் வைத்து மாணவியை பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சித்துள்ளார்.

 

அவரிடமிருந்து தப்பி முதல் மாடியில் இருந்து கீழே குதித்த மாணவி அக்கம் பக்கத்தினர் உதவியுடன் போலீசாரிடம் அளித்த புகாரின் பேரில் முருகேசன் கைது செய்யப்பட்டார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon