--- --:--:-- --

திருமணத்தின் பொழுது மணமகனுக்கு மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழப்பு..!

9

பீகாரில் திருமண நிகழ்வின் பொழுது அதிகமாக பாட்டு ஒலிக்கப்பட்டதால் மணமகன் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது. பீகார் மாநிலத்தில் உள்ள கிராமத்தில் திருமண நிகழ்ச்சி நடைபெற்றது.

 

இந்த திருமணத்தில் இளைஞர்கள் அதிக சத்தத்தில் பாட்டு கேட்டுள்ளனர். மணமகன் சத்தத்தை குறைக்குமாறு கூறிய பொழுது சத்தம் குறைக்கப்படவில்லை. இதையடுத்து மணமகனின் கழுத்தில் பெண் மாலை அணிந்து அணிவித்த உடன் அவர் மயங்கி விழுந்தார்.

 

இதனால் அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் அவரை மீண்டும் மருத்துவமனைக்கு அனுமதித்தனர். அங்கு பரிசோதித்த மருத்தவர்கள் மாரடைப்பு ஏற்பட்டு இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon