--- --:--:-- --

3 மாதங்களாக பள்ளி மாணவியை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த அதிமுக பிரமுகர்..!

8

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் பள்ளி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் அதிமுக பிரமுகர் ஜவுளிக்கடை உரிமையாளர் உள்ளிட்ட ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியை சேர்ந்த பள்ளி மாணவி கடந்த ஒரு மாதமாக பள்ளிக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளார்.

 

இது குறித்து மாணவியிடம் பெற்றோர்கள் விசாரித்த பொழுது தங்களது மகளை பாலியல் வன்கொடுமை செய்ததை அறிந்து அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து மாணவியின் பெற்றோர்கள் ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்துள்ளனர்.

 

 

போலீசார் நடத்திய தீவிர விசாரணையில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளது. விசாரணையில் தன்னை கடத்தி கட்டாயப்படுத்தி பாலியல் வன்கொடுமை செய்ததாக மாணவி வாக்குமூலம் அளித்துள்ளார்.

 

மாணவியின் வீட்டின் அருகே வசிக்கும் இருவரும் மாணவி மூன்று மாதங்களாக பலமுறை அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தியுள்ளனர். வன்கொடுமை செய்த அதிமுக பிரமுகர் சிகாமணி உள்ளிட்ட 5 பேரை போக்சோ வழக்கில் போலீசார் கைது செய்தனர்.

 

5 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் பல முக்கிய பிரமுகர்களுக்கு தொடர்பு இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

 

Right Menu Icon