ஆர்எஸ்எஸ் பேரணிக்கு அனுமதி கிடைக்குமா..? 3ம் தேதி விசாரணை..!
ஆர்எஸ்எஸ் அமைப்பின் பேரணிக்கு எதிராக தமிழக அரசு தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவில் வெள்ளிக்கிழமை விசாரிப்பதாக உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது. கடந்த ஆண்டு அக்டோபர் 2ம் தேதி தமிழகத்தில் 50 இடங்களில் ஆர்எஸ்எஸ் சார்பில் பேரணி நடத்த காவல்துறை அனுமதி மறுத்தது.
இதனை எதிர்த்து ஆர்எஸ்எஸ் அமைப்பு உயர்நீதிமன்றத்தை நாடியது. சென்னை உயர்நீதிமன்றம் இரு நீதிபதிகள் அமர்வில் அணிவகுப்பிற்கு அனுமதி வழங்கியது. இந்த உத்தரவுக்கு எதிராக தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.
இந்த வழக்கை உடனடியாக விசாரிக்க வேண்டும் என தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றம் தலைமை நீதிபதி அமர்வில் முறையிடப்பட்டது. தமிழக அரசின் கோரிக்கையை ஏற்பதாக தெரிவித்த தலைமை நீதிபதி வரும் வெள்ளிக்கிழமை விசாரிப்பதாக அறிவித்தார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





