--- --:--:-- --

நண்பனின் கொலைக்கு பழிக்கு பழி தீர்க்க பட்ட பகலில் விரல்களை வெட்டிய கொடூரம்..!

8

ஞ்சாபில் நண்பனின் கொலை சம்பவத்திற்கு பழி தீர்க்கும் விதமாக மூன்று பேர் கொண்ட கும்பல் ஒருவரின் விரல்களை பட்டப்பகலில் வெட்டிய சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. பஞ்சாப் மாநிலத்தில் இந்த கொடூர சம்பவம் நிகழ்ந்துள்ளது.

 

அந்த நபரின் விரல்களை கத்தியால் வெட்டியது மட்டுமில்லாமல் அதனை வீடியோவாக எடுத்து அந்த மர்ம நபர்கள் வெளியிட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கொலை சம்பவம் நிகழ்ந்த இடத்திலேயே விரல் வெட்டி எடுக்கப்பட்ட சம்பவம் நடந்திருப்பது அந்த பகுதியினரை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

 

தற்பொழுது விரல்கள் வெட்டப்பட்ட கொடூர சம்பவத்தின் காட்சிகள் வைரலான நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக மூன்று பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

Right Menu Icon