--- --:--:-- --

இறந்தவர் பெயரில் கட்டப்பட்ட அரசு வீடு..!

9

பிரதமர் வீடு கட்டும் திட்டத்தில் இறந்தவர் பெயரில் வீடு கட்டப்பட்டதாக தெரிவித்த வழக்கில் முறைகேடுகளை தடுக்க புதிய நடைமுறையை கொண்டு வருவது என்று உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

 

திருச்சி மாவட்டம் லால்குடியை சேர்ந்த ஒருவர் உயர்நீதிமன்ற மதுரைகிளையில் தாக்கல் செய்த மனுவில் பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தில் முறைகேடு நடந்திருப்பதாக குற்றம் சாட்டி வந்தார். இறந்தவர் பெயரில் 2,40,000 நிதி ஒதுக்கீடு செய்து முறைகேடு நடந்திருப்பதாக தெரிவித்திருந்தார்.

 

முறைகேடு செய்த அதிகாரிகள் மீது ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கோரிக்கை வைத்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த இரு நீதிபதிகள் ஏழைகள் வீடு கட்டும் திட்டத்தில் முறைகேடு நடைபெறாமல் தடுக்க வேண்டும் என தெரிவித்தனர்.

 

இதற்காக புதிய நடைமுறைகளை கொண்டு வர வேண்டும் என தெரிவித்த நீதிபதிகள் பொதுமக்கள் அறியும் வகையில் விழிப்புணர்வு விளம்பரங்களை செய்ய வேண்டும் என தெரிவித்தனர். அதிகாரிகள் மீது தமிழக அரசு வைத்த குற்றவியல் நடவடிகள் குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

 

Right Menu Icon