--- --:--:-- --

தேனியில் மது போதையில் கிணற்றில் தவறி விழுந்த முதியவர்..!

9

தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் அருகே மது போதையில் கிணற்றில் தவறி விழுந்த 65 வயது முதியவர் மூன்று நாட்களுக்கு பிறகு காயமின்றி உயிருடன் மீட்கப்பட்டார். சில மரத்துப்பட்டியை சேர்ந்த உதயசூரியன் செவ்வாய்க்கிழமை கோயில் திருவிழாவுக்கு சென்று விட்டு மது அருந்தியுள்ளார்.

 

திரும்பி வரும் வழியில் 60 அடி ஆழக்கிணற்றில் தவறி விழுந்துள்ளார். மூன்று நாட்களாக முதியவரை காணவில்லை என தேடி வந்த நிலையில் அவர் கிணற்றில் தவறி விழுந்தது தெரிய வந்தது. கிணற்றில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த முதியவரை தீயணைப்பு துறையினர் மீட்டனர்.

 

Right Menu Icon