விளையாட்டில் தோற்றதால் ஏளனமாக சிரித்த நண்பர்கள் மீது துப்பாக்கிசூடு..!
விளையாட்டில் தோற்றுப் போனதால் தங்களை பார்த்து சிரித்தவர்களை ஆத்திரத்தில் இரண்டு பேர் துப்பாக்கியால் சுட்டு கொலை செய்த கொடூரம் பிரேசிலில் நிகழ்ந்துள்ளது.
பிரேசிலில் மனுபிலாசோ மாநிலத்தில் உள்ள சிகோக் நகரில் பில்லியன் விளையாட்டில் தோற்ற பொழுது தங்களை பார்த்து சிரித்ததாக கூறி இருவர் அங்கிருந்தவர்கள் மீது சரமாரியாக துப்பாக்கி சூடு நடத்தினர்.
இந்த சம்பவத்தில் 12 வயது சிறுமி உட்பட ஏழு பேர் பரிதாபமாக பலியான நிலையில் தப்பி ஓடிய கொலையாளிகளை காவல்துறையினர் வலை வீசி தேடி வருகின்றனர்.





