காதலியின் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்த காதலன்..!
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே காதலியின் வீட்டில் காதலன் தூக்கு போட்டு மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். காரைக்குடியை சேர்ந்த இளைஞர் விக்னேஷ் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு சங்கரன் கோவில் அருகே உள்ள நீலஇலந்த குளம் கிராமத்திற்கு கோயில் சிற்ப பணிக்காக வந்துள்ளார்.
அப்பொழுது கோவிலுக்கு அருகே வசித்து வந்த ஜெனிதா என்ற பெண்ணுடன் விக்னேஷுக்கு காதல் ஏற்பட்டுள்ளது. இருவரும் நான்கு ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில் ஜெனிதாவிடம் திருமணம் செய்து கொள்ளுமாறு விக்னேஷ் வலியுறுத்தியுள்ளார்.
அதற்கு இளம்பெண் மறுப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால் விரக்தி அடைந்த விக்னேஷ் நள்ளிரவு நேரத்தில் காதலியின் வீட்டில் பூட்டை உடைத்து உள்ளே சென்று தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதாக சொல்லப்படுகிறது. தகவல் அறிந்து வந்த போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.






