பிரச்சாரத்தின் போது மசூதியில் ஒலித்த பாங்கு..கண்களை மூடி பிரார்த்தனை செய்த பிரேமலதா..!
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் வாக்காளர்களை கவர தினம் தினம் புதிய பிரச்சார யுக்திகளை அரசியல் கட்சியினர் நிகழ்த்தி வருகின்றனர். இந்நிலையில் பூங்குன்றனார் வீதியில் கலை குழுவினரை கொண்டு எம்ஜிஆர் போல் வேடம் அணிந்து நடனமாடி இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தனர்.
ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர் ஆனந்தை ஆதரித்து அக்ரஹாரம் திருநகர் காலனி கல்லு பிள்ளையார் கோவில் வீதி ஆகிய பகுதிகளில் அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் பிரச்சாரம் மேற்கொண்டார்.
திறந்த வாகனத்தில் இன்று பொதுமக்கள் மத்தியில் வாக்கு சேகரித்துக் கொண்டிருந்த பொழுது அக்ரஹாரம் பள்ளிவாசலில் பாங்கு ஒழித்ததால் தனது பேச்சை நிறுத்திவிட்டு காத்திருந்தார்.





