--- --:--:-- --

வாலிபால் விளையாடிய வட்டாட்சியருக்கு அடுத்த நொடியில் பிரிந்த உயிர்..!

8

வாலிபால் போட்டியில் விளையாடிக் கொண்டிருந்த பொழுது மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த தர்மபுரி வட்டாட்சியர் மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

 

அவர் வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில் தர்மபுரி மாவட்டத்தில் நடைபெற்ற முதலமைச்சர் கோப்பைக்கான இறகுப்பந்து போட்டியில் பங்கேற்று விளையாடிக் கொண்டிருந்த பொழுது வட்டாட்சியர் அதியமான் மாரடைப்பால் உயிரிழந்தார் என்ற செய்தி மிகவும் வேதனை அளிக்கிறது என தெரிவித்தார்.

 

வட்டாட்சியர் அதியமானை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும் அரசு ஊழியர்களுக்கும் தனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன் எனவும் கூறியுள்ளார்.

 

Right Menu Icon