வாய்க்காலில் குளிக்க இறங்கிய மாணவன் உயிரிழப்பு..!
திருப்பூரில் வாய்க்காலில் குளிக்க சென்ற கல்லூரி மாணவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது. திருப்பூர் மாவட்டம் சிக்கனா அரசு கலை கல்லூரியை சேர்ந்த ஆறு மாணவர்கள் வாய்க்காலில் குளிக்க சென்றனர்.
அப்பொழுது சஞ்சய் என்ற மாணவன் தண்ணீரில் இழுத்து செல்லப்பட்டான். இதனை கண்ட மற்ற மாணவர்கள் சஞ்சயை காப்பாற்ற முயன்ற பொழுது தண்ணீரின் வேகம் காரணமாக சஞ்சய் இழுத்து செல்லப்பட்டான்.
இது குறித்து மாணவர்கள் அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் மாணவனை தேடும் பணியில் ஈடுபட்டனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





