மாணவர்களை சித்தாள் வேலையில் ஈடுபடுத்திய சம்பவம்..!
புதுக்கோட்டையில் அரசு பள்ளி மாணவர்களை தலைமை ஆசிரியர் சித்தாள் வேலையில் ஈடுபடுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை அரசு மேலாண் மேல்நிலைப் பள்ளியில் கட்டிடம் பழுது பார்க்கும் பணி நடைபெற்றது.
பள்ளியின் தலைமை ஆசிரியர் அப்பள்ளி மாணவர்களையே சித்தாள் பணியில் ஈடுபடுத்தி உள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள் தற்பொழுது வெளியாகியுள்ளது.
அனுமதியின்றி அழைத்து செல்லப்பட்ட மாணவிகள் நால்வர் நீரில் மூழ்கி உயிரிழந்த சோகம் மறைவதற்குள்ளாக அரசு பள்ளி மாணவர்களை தலைமை ஆசிரியர் சித்தாளாக ஈடுபடுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





