--- --:--:-- --

தமிழகத்தின் அடுத்த ஐந்து நாட்களுக்கு வறண்ட வானிலை நிலவும்..!

5

தமிழகத்தில் அடுத்த ஐந்து நாட்களுக்கு வறண்ட வானிலையை நிலவும் என்று மண்டல வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இது தொடர்பாக மண்டல வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் இன்றும், நாளையும் வறண்ட வானிலே இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

அதிகாலையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்பு உள்ளது என்றும் வரும் 20ம் தேதி முதல் 22ஆம் தேதி தமிழகம், புதுச்சேரி காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

சென்னையில் அதிகபட்ச வெப்பநிலை 32 டிகிரி செல்சியஸ் ஆக இருக்கக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon