--- --:--:-- --

மூளை சாவடைந்த இளைஞரின் உடல் உறுப்புகள் தானம்..!

4

துரையில் மூளைச்சாவு அடைந்தவரின் உடல் உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டு ஆம்புலன்சில் பச்சை விளக்கு சிக்னல் போடப்பட்டு குறிப்பிட்ட நேரத்திற்குள் கோயம்புத்தூர் மற்றும் புதுக்கோட்டைக்கு கொண்டு செல்லப்பட்டது.

 

விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த செல்வம் வாகன விபத்தில் சிக்கி பலத்த காயமடைந்து மதுரை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி மூளை சாவு அடைந்தார். செல்வத்தின் மனைவி மற்றும் குடும்பத்தினரின் ஒப்புதலுடன் அவரது உடல் உறுப்புகள் தானமாக அளிக்க முடிவு செய்யப்பட்டது.

 

இதையடுத்து இன்று காலை 10.20 மணிக்கு இதயத்தை எடுத்துக்கொண்டு கோயம்புத்தூருக்கு புறப்பட்ட ஆம்புலன்ஸ் பகல் 1.20 மணிக்கும், 10.45 மணிக்கு கல்லீரலை எடுத்துக்கொண்டு புதுக்கோட்டைக்கு புறப்பட்ட ஆம்புலன்ஸ் பகல் 12.30 மணிக்கு குறிப்பிட்ட இடங்களில் சென்றடைந்தது.

 

இதயம் கோயம்புத்தூரில் உள்ள சந்திரமோகன் என்பவருக்கும், கல்லீரல் புதுக்கோட்டையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மகாராஷ்டிராவை சேர்ந்தவருக்கும் பொருத்தப்பட்டது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon