கனிமொழியின் பரப்புரையில் பரிசு பொருட்கள் விநியோகம்..!
ஈரோடு கிழக்கு தொகுதியில் திமுக எம்பி கனிமொழி மேற்கொண்ட பிரச்சாரத்தில் பங்கேற்றவர்களுக்கு வழங்கப்பட்ட பரிசு பொருட்களை பெற பெண்கள் மோதிக்கொண்டது காண்போரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் இளங்கோவன் போட்டியிடுகிறார். அவரை ஆதரித்த திமுக எம்பிக்கள் கனிமொழி பிரச்சாரம் மேற்கொண்டார். சம்பத் நகரில் நடந்த பிரச்சாரத்திற்காக அழைத்துவரப்பட்ட பெண்களுக்கு சில்வர் குடம் மற்றும் தட்டு விநியோகம் செய்யப்பட்டது.
அப்போது அனைவரும் ஒரே நேரத்தில் குவிந்ததால் கூட்டத்தில் தள்ளுமுடி ஏற்பட்டது. பெண்கள் சண்டையிட்டுக் கொண்ட காட்சிகளை காவல்துறையினர் தடுக்காமல் வேடிக்கை பார்த்தது அங்கிருந்தவர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.






