மாணவனை வகுப்பறையில் வைத்து பூட்டிச் சென்றதால் பரபரப்பு..!
உத்திரபிரதேச மாநிலம் கோரக்கூர் பகுதியில் அமைந்துள்ள பள்ளி ஒன்றில் கவனக்குறைவாக மாணவனை வகுப்பறையில் பூட்டி சென்ற சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தியது. வகுப்பறையில் மாணவன் தூங்கியதை பார்க்காமல் பள்ளி அலுவலர்கள் அறையை பூட்டி சென்றனர்.
மாணவன் காணாமல் போனதாக பெற்றோர் போலீசாரிடம் புகார் அளித்த நிலையில் பள்ளிக்கு அருகில் தேடிப் பார்த்த பொழுது மாணவனின் அலறல் சத்தம் கேட்டுள்ளது. இதையடுத்து போலீசார் பூட்டை உடைத்து மாணவனை மீட்டனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





