--- --:--:-- --

சட்டவிரோத மாடு கடத்தலை தடுக்ககோரி உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை அமல்படுத்த கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு..!

0.2

சட்டவிரோதமாக மாடு கடத்தலை தடுக்ககோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழங்கப்பட்ட தீர்ப்பை மதுரை மாவட்டம் முழுவதும் அமல்படுத்தி அதிகாரிகளுக்கு உத்தரவிடக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் தமிழக இந்து மக்கள் முன்னணி சார்பில் மாநிலத் தலைவர் வி.கே.எஸ் தமிழ்ச்செல்வம் அறிவுரையின்படி மாநில செயலாளர் கண்ணன் தலைமையில் மனு அளிக்கப்பட்டுள்ளது.

இம்மனுவில் குறிப்பிட்டுள்ள சட்டவிரோத மாடு கடத்தல் மீது நடவடிக்கை எடுப்பதாகவும் சுற்றறிக்கை அனுப்புவதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும் மாவட்ட ஆட்சித்தலைவர் கூறியுள்ளார்.இந்நிகழ்வில் ஊடகப்பிரிவு மாநிலத் தலைவர் அச்சாணி செல்வம்,மகளிர் அணி ஜெயராணி ஆகியோர் கலந்து கொண்டனர்கள்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon