குறைதீர் கூட்டத்தில் குறட்டை விட்டு தூங்கி அதிகாரி..!
கள்ளக்குறிச்சியில் பொதுமக்கள் குறைதீர் கூட்டத்தில் ஆட்சியரின் அருகே அமர்ந்து அரசு அதிகாரி தூங்கிய காட்சிகள் வெளியாகியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் கூட்டம் நேற்று நடைபெற்றது.
இதில் மாவட்ட ஆட்சியர் கலந்து கொண்டு பொதுமக்களிடம் மனுக்களை பெற்றார். துறைசார்ந்த மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்காத அதிகாரிகளிடம் ஆட்சியர் சரமாரியாக கேள்வி எழுப்பினார்.
இந்த பரப்புரைக்கு மத்தியில் ஆட்சியரின் அருகில் அமர்ந்து அரசு அதிகாரி தூங்கி வழியும் காட்சிகள் வெளியாகியுள்ளது. இந்த வீடியோ வைரலாகி வருகிறது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





