--- --:--:-- --

குறித்த காலத்தில் அனைத்து திட்டங்களையும் நிறைவேற்ற அறிவுறுத்தல்: முதலமைச்சர்

1

திட்டங்கள் என்பது அதிகாரிகளின் குழந்தைகள் என குறிப்பிட்டுள்ள முதலமைச்சரின் மு.க.ஸ்டாலின் அதை வளர்வதும், மீறுவதும் அதிகாரிகளின் கையில் தான் உள்ளதாக தெரிவித்துள்ளார்.

 

முத்திரம் பதிக்கும் முத்தான திட்டங்கள் குறித்து இரண்டாவது ஆய்வு கூட்டு முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் சென்னை நடைபெற்றதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. குறிப்பாக மருத்துவம், போக்குவரத்து, நெடுஞ்சாலை, எரிசக்தி, கூட்டுறவு உட்பட 13 துறைகளை சார்ந்த, தற்பொழுது நடைமுறையில் உள்ள 68 திட்டங்கள் மற்றும் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

 

இதில் உரையாற்றிய முதலமைச்சர் திட்டங்களை நிறைவேற்றுவதில் உள்ள தாமதங்களை தடுக்க வேண்டும் என அதிகாரிகளை கேட்டுக்கொண்டார். சில திட்டங்கள் தொய்வான நிலையில் உள்ளதாக கவலை தெரிவித்த முதலமைச்சர் ஸ்டாலின் குறித்த காலத்தில் அனைத்து திட்டங்களையும் நிறைவேற்றுமாறு அறிவுறுத்தினார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon