--- --:--:-- --

கோவை குண்டுவெடிப்பு 22 வது நினைவு தினம்..!

2

கோவை மாநகரில் ரயில் நிலையம் உள்ளிட்ட முக்கியமான இடங்களில் 3,000 மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கோவையில் 1998 ஆம் ஆண்டு பிப்ரவரி 14-ஆம் தேதி தொடர் குண்டு வெடிப்பு சம்பவங்கள் நடைபெற்றன.

 

இதில் 58 பேர் உயிரிழந்தனர். 2000-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். இந்த சம்பவத்தில் 25வது ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையடுத்து கோவையில் மக்கள் அதிக அளவில் கூடும் இடங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.

 

குறிப்பாக ரயில் நிலையத்திற்கு வரும் பயணிகளின் உடைமைகள் ஸ்கேன் செய்யப்படுகின்றன. மெட்டல் டிடெக்டர் மூலமாகவும் பரிசோதனை செய்யப்படுகிறது.

 

அசம்பாவிதங்கள் நடைபெறாமல் தடுக்க இரண்டு டிஐஜி குழு தலைமையில் 3,000க்கும் மேற்பட்ட காவல்துறையினர் மாவட்டம் முழுவதும் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளதாக கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon