--- --:--:-- --

படிக்கட்டில் தொங்கியபடி மாணவர்கள் அட்டகாசம்..பாதியிலேயே நிறுத்தப்பட்ட பேருந்து..!

3

டலூரில் பேருந்து படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்த மாணவர்கள் நடத்துனரை தகாத வார்த்தைகளில் திட்டியதால் பேருந்து பாதியிலேயே நிறுத்தப்பட்டது. மங்களூரில் இருந்து திட்டக்குடி நோக்கி சென்று கொண்டிருந்த அரசு பேருந்தில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்துள்ளனர்.

 

அவர்களை தட்டி கேட்டு நடத்துனரை மாணவர்கள் தரக்குறைவாக திட்டியதாக கூறப்படுகிறது. இதனால் அரசு பேருந்து திட்டக்குடி பெரியார் நகர் பகுதியில் பாதியிலேயே நிறுத்தப்பட்டது. மாணவர்களின் செயல் குறித்து பேருந்து ஓட்டுனரும், நடத்துனரும் காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர்.

 

காவல்துறையினர் வருவதற்கு தாமதமானதால் பயணிகள் பேருந்துலிருந்து இறங்கி நடந்து சென்றனர். அநாகரிகமாக நடந்து கொண்ட மாணவர்கள் மீது பேருந்தை பாதியிலேயே நிறுத்திய பேருந்து ஓட்டுனர் மற்றும் நடத்துனர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்தனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon