--- --:--:-- --

கடலூர் மீனவர்கள் இன்று முதல் மீன் பிடிக்க செல்லலாம்..!

4

வானிலை எச்சரிக்கை விலக்கி கொள்ளப்பட்டதால் இன்று முதல் மீனவர்கள் மீன்பிடிக்க செல்லலாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. கடலூர் மீனவர்கள் இன்று முதல் மீன் பிடிக்க செல்லலாம்.

 

அனைத்து வகையான படகுகளும் இன்று முதல் கடலுக்கு மீன் பிடிக்க செல்லலாம் என கடலூர் மீன்வளத்துறை தெரிவித்துள்ளது. ஒன்பது துறைமுகங்களில் ஏற்றப்பட்டிருந்த புயல் எச்சரிக்கை கூண்டுகளை இறக்கி விட வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது.

 

காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை கடந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழந்ததையடுத்து அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon