அடுத்தடுத்து 2 ஏடிஎம்களில் கைவரிசை..38 லட்சம் கொள்ளை..!
ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீர் பகுதியில் இரண்டு வங்கி ஏடிஎம் இயந்திரங்களை உடைத்து 38 லட்சம் ரூபாயை முகமூடி கொள்ளையர்கள் திருடி சென்ற காட்சி அங்கிருந்து சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. ஒரு ஏடிஎம் இயந்திரத்தில் இருந்து 8 லட்சம் ரூபாயும், மற்றொரு ஏடிஎம் இயந்திரத்தில் இருந்து 30 லட்சம் ரூபாயும் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளன.
இரண்டு ஏ டி எம் மையத்திலும் ஒரே மாதிரி கொள்ளை நடந்திருப்பதால் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் ஒரே கும்பலை சேர்ந்தவர்களாக இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





