--- --:--:-- --

சீன கப்பல் மூழ்கியதில் எட்டு பேர் பலி..!

7

தென்கொரியா நோக்கி சென்ற சரக்கு கப்பல் மூழ்கியதில் எட்டு பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சீனாவை சேர்ந்த 16 பேரும், மற்ற எட்டு பேரும் சரக்கு கப்பலில் சென்று கொண்டிருந்தனர்.

 

அப்பொழுது ஜப்பானின் நாகசாகி மற்றும் தென்கொரியாவின் தீவு அருகே சென்ற பொழுது மோசமான வானிலை காரணமாக சரக்கு கப்பல் கடலில் மூழ்கியது.

 

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்று தென்கொரியா மற்றும் ஜப்பான் கடலோர காவல்துறையினர் 13 பேரை உயிருடன் மீட்டனர். இதில் எட்டு பேர் உயிரிழந்ததாக சீன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon