--- --:--:-- --

பாம்புடன் செல்பி எடுக்க ஆசைப்பட்டு உயிரை விட்ட இளைஞர்..!

6

ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டத்தை சேர்ந்தவர் மணிகண்டா ரெட்டி. இவர் கணக்கூர் பகுதியில் ஜூஸ் கடை நடத்தி வந்தார். கடந்த செவ்வாய் கிழமை இரவு கடையை மூடிவிட்டு வீடு திரும்பும் போது பஸ் நிலையம் பின்புறம் பாம்பாட்டி ஒருவரை பார்த்த மணிகண்டா அவரிடம் இருந்த பாம்பை தனது கழுத்தின் மீது போடும்படி கெஞ்சினார்.

 

ஆனால் பாம்பாட்டி அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை. எனினும் மணிகண்டா தொடர்ந்து பணம் தருவதாக கூறி அவரை வற்புறுத்தினார். ஒரே ஒரு செல்பி மட்டும் எடுத்துக் கொள்கிறேன் தயவு செய்து பாம்பை எனது கழுத்தின் மீது ஒரு நிமிடம் மட்டும் விடு என்று கெஞ்சியுள்ளார். பாம்பாட்டியோ பணத்திற்கு ஆசைப்பட்டு ஒப்புக்கொண்டார்.

 

பாம்பை கழுத்தின் மீது வைத்தும் செல்பி எடுத்துக் கொண்டார் மணிகண்டன். அதன் பின்னர் பாம்பை தோளிலிருந்து திரும்ப எடுக்க முற்பட்ட பொழுது அது மணிகண்டாவை எதிர்பாராத விதமாக தீண்டி விட்டது.

 

இதையடுத்து அலறி துடித்த அவரை அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸில் கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அவர் இறந்துவிட்டார். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon