இந்திய மல்யுத்த சம்மேளன உதவி செயலாளர் சஸ்பெண்ட்..!
இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் உதவி செயலாளர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். இந்திய கூட்டமைப்பு மற்றும் அதன் தலைவர் மீது மல்யுத்த வீராங்கனை பாலியல் குற்றச்சாட்டை தெரிவித்து டெல்லி சந்தர் மந்தர் பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த விவகாரம் தொடர்பாக இந்திய மல்யுத்த கூட்டமைப்பினர் மத்திய அரசு விளக்கம் கேட்டது. மேலும் பாலியல் குற்றச்சாட்டு தொடர்பாக விசாரணை நடத்த இந்திய ஒலிம்பிக் சங்கம் ஏழு பேர் கொண்ட குழுவை அமைத்துள்ளது. விவகாரம் தொடர்பாக வீரர் வீராங்கனைகளுடன் மத்திய அமைச்சர் பேச்சு வார்த்தை நடத்தினார்.
இந்த விவகாரத்தில் விசாரணை முடியும் வரை கூட்டமைப்பின் தலைவர் ஒதுங்கி இருப்பார் என்று தெரிவிக்கப்பட்டதை எடுத்து போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. மேலும் அவர் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.






