--- --:--:-- --

கள்ள நோட்டுகளை அச்சிட்டு புழக்கத்தில் வருவதாக 6 பேர் கைது..!

1

திருப்பூர் அருகே வாடகைக்கு வீடு எடுத்து தங்கி கள்ள நோட்டுகளை அச்சிட்டு புழக்கத்தில் வருவதாக 6 பேர் கைது செய்யப்பட்டனர். தேனி மாவட்டத்தைச் சேர்ந்த பிரபு கேரளாவை சேர்ந்த தனது கூட்டாளி கனகராஜ் உடன் குழுமம் பகுதியில் வீடு எடுத்து தங்கி பிரிண்டர் மிஷினில் போலி நோட்டுகளை அச்சிட்டு வந்துள்ளார்.

 

இந்த நிலையில் மூணாறில் உள்ள சிடிஎம்-இல் கள்ள நோட்டுகள் சோதனை செய்யும் விதமாக கனகராஜ் தனது வங்கி கணக்கில் செலுத்தியுள்ளார்.

 

இதையடுத்து வங்கி அதிகாரிகள் அளித்த புகாரின் பேரில் கனகராஜ் கைது செய்தபோது வீட்டில் பதிக்க வைத்திருந்த ஒரு லட்சத்து 78 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான போலி 500 ரூபாய் நோட்டுகளை பறிமுதல் செய்தனர். வாக்குமூலத்தின் அடிப்படையில் பிரபு உட்பட ஐந்து பேரையும் கைது செய்தனர்.

 

Right Menu Icon