--- --:--:-- --

தியேட்டர் கேண்டினில் ராணுவ வீரர் அட்டகாசம்..!

3

தென்காசி மாவட்டம் கடையத்தில் சினிமா தியேட்டரில் ரகளையில் ஈடுபட்ட கும்பலின் வீடியோ வெளியான நிலையில் இராணுவ வீரரை போலீசார் கைது செய்தனர்.

 

ஜனவரி 15ஆம் தேதி நள்ளிரவு காட்சிகள் ஓடிய வாரிசு படம் பார்க்க வந்த ஒரு கும்பல் கேண்டினில் வாந்தி எடுத்ததாக கூறப்படுகிறது. இதனை சுத்தம் செய்ய திரையரங்கு ஊழியர்கள் கூறியபோது ஏற்பட்ட தகராறில் தியேட்டரின் முன் பக்க கண்ணாடி உடைந்தது.

 

இதில் தியேட்டர் உரிமையாளர் கோபிநாத்தின் கையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து போலீசார் வழக்கு பதிவு செய்து ராமச்சந்திரன் உட்பட நான்கு பேரை கைது செய்ததோடு மேலும் ஆறு பேரை தேடி வருகின்றனர்.

 

Right Menu Icon