செல்பி எடுப்பதற்காக வந்தே பாரத் ரயிலில் புகுந்த நபர்..!
ஆந்திராவில் வந்தே பாரத் ரயிலில் ஏறி செல்பி எடுக்க முயன்றவர் தானியங்கி கதவுகள் மூடியதால் இறங்க முடியாமல் தவித்துள்ளார். 150 கிலோமீட்டர் ரயிலில் பயணம் செய்யும் வீடியோ வெளியாகியுள்ளது.
வந்தே பாரத் ரயிலில் ஏறி ஒரு நபர் செல்பி எடுக்க முயன்றார். அவர் ரயிலில் ஏறிய சில நொடிகளில் கதவு அடைக்கப்பட்டு ரயில் புறப்பட்டு விட்டது. இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் தவித்த அந்த நபர் 150 கிலோமீட்டர் ரயில் பயணம் செய்து விஜயவாடாவில் இறங்கினார்.
டிக்கெட் இல்லாமல் ரயிலில் ஏறிய காரணத்திற்காக டிக்கெட் உடன் அபராத தொகையையும் செலுத்த வேண்டும் என டிக்கெட் பரிசோதகர் தெரிவித்தார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





