அடுத்தடுத்து சர்ச்சையில் சிக்கும் ஆளுநர்! அமித்ஷாவை சந்திக்கிறார்..!
அமித்ஷாவை சந்திக்கிறார் ஆளுநர் ஆர்.என். ரவி. மீண்டும் டெல்லி சென்றுள்ள ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேச திட்டமிட்டுள்ளார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஆளுநர் ரவி இடையே கருத்து வேறுபாடு இருந்து வருகிறது. கடந்த 12ஆம் தேதி குடியரசு தலைவர் திரௌபதி முர்முவை சந்தித்த திமுக குழு ஆளுநர் செயல்பாடு குறித்து முறையிட்டது.
இதையடுத்து கடந்த 13 ஆம் தேதி டெல்லி சென்ற தமிழ்நாடு ஆளுநர் 14ஆம் தேதி இரவு சென்னை திரும்பினார். மீண்டும் டெல்லி சென்றுள்ள ஆளுநர் டெல்லி பயணத்தை முடித்துக் கொண்டு நாளை இரவு சென்னை திரும்புகிறார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





