நள்ளிரவில் நாயை கவ்விக் கொண்டு தெருவில் வந்த சிறுத்தை..!
கோவை மாவட்டம் வால்பாறையில் தெருவில் உலா வந்த சிறுத்தை ஒன்று வாயில் நாயை கவியபடி வரும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. இன்று அதிகாலை இந்த சம்பவம் நடந்ததாக கூறப்படுகிறது.
சுமார் 50-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ள நிலையில் இது மிகவும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே வனத்துறையினர் இந்த பகுதிக்கு வந்து சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





