--- --:--:-- --

என்னை கேள்வி கேட்க நீங்கள் யார்? கவர்னர் மீது சீறிய முதலமைச்சர்..!

5

நான் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலமைச்சர் என்றும் நீங்கள் யார் எனவும் டெல்லி துணைநிலை ஆளுநருக்கு டெல்லி முதலமைச்சர் அறிக்கை அளித்துள்ளார்.

 

டெல்லியில் உள்ள ஆரம்ப பள்ளி ஆசிரியர்களை இங்கிலாந்து நாட்டிற்கு பயிற்சிக்கு அனுப்பி வைக்கும் திட்டத்தை அரவிந்த் தலைமையிலான திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்க டெல்லி துணை நிலைய ஆளுநர் வி.கே.சக்சேனா மறுப்பு தெரிவித்தார்.

 

டெல்லி துணைநிலை ஆளுநருக்கும். ஆம் ஆத்மி அரசுக்கும் இடையே மோதல் போக்கு நிலவு வருகிறது. இந்நிலையில் டெல்லி சட்டப்பேரவையில் விவாதம் நடைபெற்றது.

 

அப்போது துணைநிலை ஆளுநர் சக்சனா மீது டெல்லி முதலமைச்சர் குழந்தைகள் எப்படி படிக்க வேண்டும் என்பதை தீர்மானிக்க ஆளுநர் மற்றும் தலைமை ஆசிரியர் இல்லை என்றும் கூறினார். நான் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலமைச்சர் என்றும், நீங்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவராய் எனவும் ஆளுநருக்கு கேள்வி எழுப்பினார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon