காருக்கு அடியில் பெண் இழுத்து செல்லப்பட்ட வழக்கில் உள்துறை அமைச்சகம் அதிரடி நடவடிக்கை..!
டெல்லியில் புத்தாண்டு தினத்தன்று கார் மோதி இளம் பெண் இறந்த விவகாரத்தில் 11 காவலர்களை நீக்கம் செய்து மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
இருசக்கர வாகனத்தில் பெண் நீண்ட தூரங்களுக்கு இழுத்து செல்லப்பட்ட நிலையில் உயிரிழந்தார். இந்த விபத்து நடந்த சாலையில் பணியில் இருந்த அனைத்து காவலர்களின் பணிகளை நீக்கம் செய்து உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
குற்றவாளிகள் தண்டிக்கப்படும் வகையில் குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்யுமாறு டெல்லி காவல்துறைக்கு உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. விசாரணையின் முன்னேற்றம் குறித்து இரு வாரங்களுக்கு ஒரு முறை அறிக்கை சமர்ப்பதை உறுதி செய்யுமாறு டெல்லி காவல்துறைக்கு உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.



