சென்னை திருவள்ளூரில் 108 ஆம்புலன்ஸ் சேவை..!
2022ம் ஆண்டில் சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் 108 ஆம்புலன்ஸ் சேவை மூலம் 2 லட்சத்து 12 ஆயிரம் பேர் பலனடைந்துள்ளனர். சென்னையில் ஆம்புலன்ஸ் சேவை ஏழு நிமிடங்களில் கிடைப்பது தெரிய வந்துள்ளது.
தமிழகத்தில் 108 ஆம்புலன்ஸ் சேவை செயல்படுத்தப்பட்டு வருகிறது. சென்னையில் 150 ஆம்புலன்சுகளும் திருவள்ளூர் மாவட்டத்தில் 108 ஆம்புலன்ஸ்களும் சேவை பயன்பாட்டில் உள்ளன. சென்னையை பொருத்தவரை 108 ஆம்புலன்ஸ் சேவை மூலம் ஒரு லட்சத்து 17 ஆயிரம் பேர் பலனடைந்துள்ளனர்.
இவர்களில் 7,656 பேர் பிரசவ சிகிச்சைகளுக்காகவும் 9 ஆயிரத்து 927 பேர் சாலை விபத்தில் சிக்கியவர்களும் அடங்குவர். 15 கர்ப்பிணிகளுக்கு ஆம்புலன்சில் பிரசவம் நடைபெற்றுள்ளது.
திருவள்ளூர் மாவட்டத்தை பொருத்தவரை 108 ஆம்புலன்ஸ் சேவை மூலம் மொத்தம் 95 ஆயிரம் பேர் பயன் பெற்றுள்ளனர். இவர்களில் 25 ஆயிரத்து 998 பேர் பிரசவ சிகிச்சைகளுக்காகவும், 10,906 பேர் சாலை விபத்தில் சிக்கியவர்களும் அடங்குவர்.






