விஜய்க்காக கீர்த்தி சுரேஷ் செய்த விஷயம்..!
கீர்த்தி சுரேஷ் விஜய்க்கு தீவிரமான ரசிகை என்பது எல்லோருக்கும் தெரிந்தது தான். அவர் விஜய்க்கு ஜோடியாகவும் பைரவா, சர்க்கார் போன்ற படங்களில் நடித்து இருக்கிறார். தற்போது விஜய் நடிப்பில் வாரிசு படம் இன்று தியேட்டர்களில் ரிலீஸ் ஆகி இருக்கிறது. அதற்காக கீர்த்தி சுரேஷ் ஒரு விஷயம் செய்து இருக்கிறார்.
கீர்த்தி சுரேஷ் வாரிசு படம் பார்பதற்காகவே இன்று சென்னைக்கு வந்தாராம். எங்கு போனாலும் பொங்கலுக்கு சென்னைக்கு வந்து தான் ஆகணும் என தியேட்டரில் எடுத்த போட்டோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.
சமீபத்தில் அவர் தாய்லாந்துக்கு சுற்றுலா சென்று இருந்தார். தற்போது விஜய்க்காக அவர் சென்னைக்கு பறந்து வந்திருக்கிறார். சென்னை வெற்றி தியேட்டரில் தான் அவர் ரசிகர்கள் உடன் படம் பார்த்து இருக்கிறார்.






