கோவை கார் வெடிப்பு வழக்கில் கைதான 4 பேரிடம் விசாரணை..!
கோவை கார் வெடிப்பு சம்பவத்தில் கைதான 4 பேரை கோட்டைமேடு அழைத்து வந்து தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். கோவை உக்கடத்தில் உள்ள கோடீஸ்வரர் கோவில் முன்பாக கடந்த அக்டோபர் மாதம் கார் வெடிப்பு சம்பவத்தில் ஜமீஷா என்பவர் உயிரிழந்தார்.
இந்த வழக்கை தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் விசாரித்து வந்தனர். 11 பேர் கைது செய்யப்பட்டு இருக்கும் நிலையில் 5 பேருடன் விசாரணை நிறைவடைந்துள்ளது.
இந்த நிலையில் மேலும் 6 பேரை காவலில் எடுத்து சென்னையில் வைத்து விசாரணை எடுத்து நடத்தி வந்த நிலையில் தேசிய புலனாய்வு அதிகாரிகள் அவர்களை நேற்று காலை கோவை அழைத்து வந்தனர். அவர்களில் நான்கு பேரை கோட்டைமேடு பகுதியில் உள்ள ஜமீஷா முபனின் வீட்டிற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.
மேலும் உக்கடம் பகுதியில் உள்ள சனாஃபர் அலி மற்றும் ஜிஎம் பேக்கரி உள்ளிட்ட இடங்களுக்கும் அழைத்துச் சென்று அதிகாரிகள் விசாரணை நடத்தி அதனை வீடியோ பதிவு செய்து கொண்டனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





