பன்றி காய்ச்சலுக்கு பெண் ஒருவர் பலி..!
நாமக்கல் மாவட்டத்தில் பன்றி காய்ச்சலுக்கு பெண் ஒருவர் பலியானதை அடுத்து அந்த பகுதியில் மருத்துவ குழுவினர் முகாம் அமைத்து பரிசோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
ஆசிரியர் காலனி பகுதியை சேர்ந்த பெண் ஒருவருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில் பரிசோதனையில் அவருக்கு H1N1 வைரஸ் தாக்குதல் இருப்பது உறுதியானது. இதையடுத்து சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்நிலையில் ஆட்சியர் உத்தரவின் பேரில் அப்பகுதியில் மருத்துவக் குழுவினர் முகாம் அமைத்து பரிசோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





