--- --:--:-- --

பாலியல் வன்கொடுமைக்கு எதிராக உறுதிமொழி..! திருப்பூர் மாநகர காவல் ஆணையர் பிரவீன் குமார் அபிநபு பங்கேற்பு!!

14

திருப்பூர், சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்டம் அலகு -2 (என்.எஸ்.எஸ்) சார்பில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை தடுப்பு உறுதிமொழி எடுக்கும் நிகழ்ச்சி திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நடந்தது.

 

நிகழ்ச்சிக்கு சிக்கண்ணா கல்லூரி என்.எஸ்.எஸ் அலகு – 2 ஒருங்கிணைப்பாளர் மோகன்குமார் தலைமை தாங்கினார். மாணவர் தலைவர்கள் சுந்தரம், பூபதி ராஜா, ராஜபிரபு, விஜய் ஆகியோர் முன்னிலை வகித்தனர். உளவுப் பிரிவு உதவி கமிஷனர் ஈஸ்வரன் வரவேற்றார்.

சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனர் பிரவீன் குமார் அபிநபு பாலியல் வன்கொடுமையால் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள் எவ்வாறு பாதிக்கப்படுகிறார்கள் என்பது குறித்து விளக்கி பேசினார். பின்னர் மாணவர்கள் முன்பு உறுதிமொழியை படிக்க அனைவரும் உறுதிமொழி ஏற்றனர். இதில் 15 மாணவிகள் உள்பட 35 மாணவர்கள் கலந்து கொண்டு உறுதிமொழி ஏற்றனர்.

 

நிகழ்ச்சியில் கல்லூரி மாணவர் உறுதிமொழியை படித்துக் கொண்டிருந்தபோது தடுமாற போலீஸ் கமிஷனரே உறுதி மொழியை தமிழில் அழகாக உச்சரித்ததால் மாணவர்கள் உற்சாகம் அடைந்தனர். அதன் பின்னர் பொதுமக்களுக்கு துண்டு பிரசுரம் வழங்கினர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon