ஜம்மு காஷ்மீரில் 2 மாதங்களுக்கு ஊரடங்கு அமல்..!
ஜம்மு காஷ்மீரில் சம்பா மாவட்டத்திற்கு உட்பட்ட சர்வதேச எல்லை பகுதியில் இரண்டு மாதங்களுக்கு இரவில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. கடும் பனி காணப்படுவதால் எல்லை கடந்த ஊடுருவல், ஆளில்லா விமானங்கள் வழியே ஆயுத கடத்தல் உள்ளிட்ட அச்சுறுதல்கள் ஏற்பட்டுள்ள நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சர்வதேச எல்லை பகுதியிலிருந்து ஒரு கிலோமீட்டர் பரப்பளவிற்கு இரவு 9 மணியிலிருந்து காலை 6 மணி வரை ஊரடங்கு அமலில் இருக்கும். மக்கள் தேவை இன்றி இந்த பகுதிகளில் நடமாடக்கூடாது என பாதுகாப்பு படையினர் தெரிவித்துள்ளனர்.






