--- --:--:-- --

கள்ளக்காதலி நடத்தையில் சந்தேகம் கொண்டு கொலை..!

9

தர்மபுரி மாவட்டத்தில் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டு கள்ளக்காதலியை இரும்புராடால் அடித்துக் கொன்ற நபரை போலீசார் கைது செய்தனர். கீழானூர் வனப்பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத பெண் சடலம் ஒன்று அழுகிய நிலையில் கிடந்துள்ளது.

 

பொதுமக்கள் அளித்த தகவலின் பேரில் வந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்த வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திய பொழுது உயிரிழந்த பெண் பார்வதி என்பது தெரிய வந்தது.

 

இரண்டு பிள்ளைகள் உள்ள நிலையில் ஆண்டியப்பன் தகாத உறவில் இருந்ததும் தெரிய வந்துள்ளது. பார்வதி நடத்தையில் சந்தேகம் அடைந்த ஆண்டியப்பன் அவரை காப்பு காட்டுக்குள் அழைத்து சென்றுள்ளார்.

 

அங்கு இருவரும் தனிமையில் இருந்த பொழுது திடீரென இரும்பு ராடால் தாக்கியதில் பார்வதி சமவெளி உயிரிழந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon