--- --:--:-- --

பள்ளி மாணவருக்கு தலையில் அடி..பலியான சோகம்!

2

திருச்செந்தூர் அருகே அரசு பள்ளி ஒன்றில் மாணவர் ஒருவர் தலையில் அடிபட்டு உயிரிழந்தார். மாணவர் இறப்பில் சந்தேகம் உள்ளதாக கூறி அவரது உடலை வாங்க மறுத்த உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ள அரசு பள்ளியில் அஜய்குமார் என்ற மாணவர் உயிரிழந்தார். பள்ளியில் கட்டிட பணிகள் நடந்து கொண்டிருக்கும் சூழலில் ஐந்தாம் வகுப்பு மாணவர்களை பள்ளி தலைமை ஆசிரியர் பள்ளிக்கு வரவழைத்ததாக கூறப்படுகிறது.

 

பள்ளியில் இருந்து திடீரென வெடி வெடித்தது போல் சத்தம் வந்ததாகவும் பள்ளிக்கு சென்று பார்க்கும் பொழுது மாணவர் அஜய்குமார் தலையில் காயத்துடன் ரத்த வெள்ளத்தில் கிடந்ததாகவும் பகுதி மக்களுக்கு கூறுகின்றனர்.

 

காயமடைந்த அஜய் குமார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இந்த நிலையில் மாணவனின் உயிரிழப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி உடலை வாங்க மறுத்து உறவினர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

 

காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

Right Menu Icon