டெல்லியில் பெண்ணுக்கு செருப்பு மாலை அணிவித்து தாக்குதல்..!
பெண்ணுக்கு செருப்பு மாலை அணிவித்து குச்சியால் கொடூரமாக தாக்கிய சம்பவம் டெல்லியில் அரங்கேறி உள்ளது. டெல்லியில் நடைபெற்ற கூட்டத்தில் பெண் ஒருவர் செருப்பு மாலை அணிவித்து குச்சியை கொண்டு சரமாரியாக தாக்கப்பட்டுள்ளார்.
இதில் கூட்டத்தில் கலந்து கொண்ட பொதுமக்கள் இந்த வீடியோவை பதிவு செய்து இணையத்தில் பதிவிட்டனர். தற்பொழுது இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி உள்ளது.
இந்த வீடியோவை பார்த்து நெட்டிசன்கள் அதிர்ச்சி அடைந்து சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்து வருகின்றனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





