--- --:--:-- --

மது அருந்தியதை தட்டி கேட்ட மனைவியை கொலை செய்த கணவர்..!

10

சென்னையில் வீட்டில் நண்பர்களுடன் மது அருந்தியதை தட்டி கேட்ட மனைவியை, கணவன் கழுத்தை நெறித்துக் கொன்ற சம்பவம் நடந்தது. சென்னை தண்டையார் பேட்டையை சேர்ந்த நந்தகுமார் – கவிதா தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

 

புத்தாண்டு அன்று மனைவி கவிதாவை அவர்களது தகப்பனார் வீட்டிற்கு அனுப்பி வைத்துவிட்டு வீட்டில் நண்பர்களுடன் நந்தகுமார் மது அருந்தி உள்ளார். அடுத்த நாள் காலை கணவரின் வீட்டிற்கு வந்த கவிதா மது பாட்டில்கள் இருப்பதை கண்டு ஆத்திரம் அடைந்துள்ளார்.

 

இது தொடர்பாக கணவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்..கவிதாவை கழுத்தை நெரித்து தள்ளிவிட்டு மது போதையில் மீண்டும் உறங்க சென்றுள்ளார். மூச்சில்லாமல் இருந்ததால் குழந்தைகள் இருவரும் தந்தையிடம் கூறியுள்ளனர்.

 

பின்னர் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்ட பொழுது ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிய வந்தது. கழுத்து நெறிக்கப்பட்டதற்கான அடையாளம் இருந்ததால் உடலை தற்கொலை வழக்கமாக போலீசார் பதிவு செய்தனர்.

 

பின்னர் விசாரணை நடத்தியதில் கணவர் கழுத்தை நெரித்து கொன்று போலீசார் நந்தகுமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon